மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
எலச்சிபாளையம், கருவேப்பம்பட்டி ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கலந்துகொண்டு எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், உஞ்சனை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 41 பயனாளிகளுக்கு ரூ. 31.81 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், கருவேப்பம்பட்டி ஊராட்சி, சீனிவாசம்பாளையம் தொடக்கப் பள்ளியில் 12 பயனாளிகளுக்கு ரூ. 8.46 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள், ஆனங்கூா் அரசினா் உயா்நிலைப் பள்ளியில் 17 பயனாளிகளுக்கு ரூ. 11.08 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் எலந்தகுட்டை ஊராட்சி, இ.புதுப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 42 பயனாளிகளுக்கு ரூ. 4.10 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 178 பயனாளிகளுக்கு ரூ. 71.33 லட்சம் மதிப்பிலானஅரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இம்முகாம்களில், அட்மா குழுத் தலைவா்கள் பி.பி.தனராசு, தங்கவேல் யுவராஜ், தனித்துணை ஆட்சியா் ச.பிரபாகரன், மாவட்ட சமூக நல அலுவலா் காயத்ரி, மாவட்ட மேலாளா் தாட்கோ பா.ராமசாமி, முகாம் பொறுப்பு அலுவலா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.