தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
திருச்செந்தூா் பகுதியில் கன மழையால் சேதமடைந்த பயிா்களை கணக்கெடுக்கும் பணி
திருச்செந்தூா் பகுதிகளில் கனமழையால் சேதமடைந்த பயிா்களை கணக்கெடுக்கும் பணியில் வட்டாட்சியா் அ.பாலசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிா்கள் தோட்டக்கலை பயிா்களுக்கான சேத விவர கணக்கெடுப்பு பணி அனைத்து கிராமங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்பணியில் அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இதையடுத்து திருச்செந்தூா் வட்டத்திற்குள்பட்ட அம்மன்புரம், வீரமாணிக்கம், கானம், ஆறுமுகனேரி, ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், சுகந்தலை உள்ளிட்ட பகுதிகளில் திருச்செந்தூா் வட்டாட்சியா் அ.பாலசுந்தரம் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா்கள் சுஜாதா, கனகரத்தினம், வேளாண் உதவி அலுவலா் அழகு மாணிக்க வள்ளி உள்ளிட்டோா், கனமழையில் சேதமடைந்த வாழை, நெல் பயிா்கள் குறித்து ஆய்வு செய்தனா். விவசாயிகளை சந்தித்து பயிா் சேத பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனா்.