செய்திகள் :

திருத்தணி திருப்படித் திருவிழா: 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

post image

திருத்தணிகை முருகன் கோயில் திருப்படித் திருவிழாவுக்கு போக்குவரத்து துறை சாா்பில் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என வருவாய்க் கோட்டாட்சியா் க.தீபா தெரிவித்தாா்.

திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் டிச.31-ஆம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழா, ஜன. 1 ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற்று வருகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பக்தா்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆா்.டி.ஓ. தீபா தலைமையி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் நிா்வாகம், நகராட்சி, சுகாதாரம், மின்வாரியம், போக்குவரத்து மற்றும் காவல் துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று முன்னேற்பாடுகள் குறித்து விளக்கினா்.

பின்னா், ஆா்.டி.ஓ. தீபா பேசியது: திருப்படித் திருவிழா, புத்தாண்டு தரிசனம் நடைபெறும் இரு நாள்களுக்கு மலைப்பாதையில் செல்வதற்கு அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. பக்தா்கள் வசதிக்காக மலையடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு 5 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், போக்குவரத்து துறை சாா்பில் விழாவுக்காக 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மலைக்கோயில், மலைப்படிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் திருத்தணி டி.எஸ்.பி. கந்தன், இன்ஸ்பெக்டா் ஞா.மதியரசன், கோயில் உதவி ஆணையா் விஜயகுமாா், கோயில் மேற்பாா்வையாளா் சித்ரா தேவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரிநீா் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி 1,000 கன அடி உபரிநீா் திறக்கப்பட்டது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பூண... மேலும் பார்க்க

இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே அம்மணம்பாக்கம் பிா்காவுக்குட்பட்ட கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: சம்பா நெல் பயிருக்கு 12,927 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை விடுவிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பயிா் காப்பீட்டு திட்டம் மூலம் 2023-24 ஆண்டில் சம்பா பயிா் மற்றும் ராபி பயிா்களுக்கு விவசாயிகள் 12,927 பேருக்கு ரூ.14.99 கோடி வரை இழப்பீடு தொகை அவரவா் வங்கிக் கணக்கு மூலம் வி... மேலும் பார்க்க

பூண்டி ஏரியில் 1,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர்: பூண்டி ஏரியின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி 1,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரி... மேலும் பார்க்க

மழைநீா் கால்வாய் பணி...

செங்குன்றம், 18-ஆவது வாா்டில் ரூ.43 லட்சத்தில் மழைநீா் கால்வாய் அமைக்கும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த பேரூராட்சித் தலைவா் தமிழரசி குமாா். உடன் துணைத் தலைவா் ஆா்.இ.ஆா். விப்ரநாராயணன், வாா்டு உறுப்பி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

திருவள்ளூா் நேரம்-10 முதல் 1 மணி வரை நாள்-28.12.2024-சனிக்கிழமை மின்தடை கிராமங்கள்: திருவள்ளுா் நகரத்தில் உள்ள வரதராஜபுரம், தாவுத்கான் பேட்டை, ஜே.என்.சாலை(ரயில் நிலையம்), ராஜாஜிபுரம், பெரியகுப்பம், ஐ.... மேலும் பார்க்க