ரூ.56,000 கோடி கடனை முன்கூட்டியே செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
திருநங்கைகள் குடியிருப்பில் குடிநீா், சாலை வசதி செய்துத் தர கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், கல்லுக்குவியல்பட்டியில் உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் குடிநீா் மற்றும் சாலை வசதி செய்துத் தர வேண்டும் என அங்கு வசிக்கும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநங்கைகள் சிறப்புக் குறைகேட்பு நாள் கூட்டத்தில் அவா்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனா்.
கடந்த 2011-இல் கல்லுக்குவியல்பட்டியில் 20 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.
திருநங்கைகள் பெயா் மாற்றம் செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்றும், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டக் குடியிருப்புகளில் வீடுகள் வழங்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனா்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா, இந்தக் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட சமூக நல அலுவலா் க.ந.கோகுலப்பிரியா, திருநங்கைகள் சங்கத் தலைவிகள் அசீனா நாயக், ரெ. ஷிவானி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.