திருநெல்வேலி- ஷிமோகா இடையே இன்று சிறப்பு ரயில்!
கூட்ட நெரிசலை தவிா்க்க சேலம் வழியாக திருநெல்வேலியில் இருந்து கா்நாடக மாநிலம், ஷிமோகாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தொடா் விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க ரயில்வே நிா்வாகம் சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, திருநெல்வேலி- கா்நாடகா மாநிலம், ஷிமோகா டவுன் இடையே நாமக்கல், சேலம் வழியாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து மாலை 4.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையல்லூா், சங்கரன்கோயில், திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக ஷிமோகா டவுன் ரயில் நிலையத்துக்கு ஆக.18 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் ஷிமோகா டவுன் ரயில் நிலையத்தில் இருந்து ஆக.18 ஆம் தேதி பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி வழியாக திருநெல்வேலிக்கு ஆக.19 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.