மல்லிப்பட்டினம்: தொடர் மழை; ஒரு அடி உயர்ந்த கடல் நீர் மட்டம்... ``அச்சப்பட தேவை...
திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; ஆபத்தை உணர்ந்த அதிகாரிகள்; சரிசெய்யப்பட்ட விளக்கு கம்பம் !
திருப்பத்தூரில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலையின் நடுவே வரிசையாக மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதில், பேருந்து நிலையத்தின் முன் அமைக்கப்பட்ட மின் விளக்கு கம்பங்களில் ஒன்று தற்போது சேதமடைந்தது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக விழும் நிலையில் உள்ளது.
குறிப்பாக, இந்த இடத்தில் அதிகமாக வாகனங்கள் நிற்கின்றன. பேருந்துகளும் இவ்விடத்தில் நின்றுதான் பேருந்து நிலையத்தின் உள்ளே செல்கின்றன. இதனால், அந்த வழியே செல்லும் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இந்த மின் விளக்கு கம்பம் மேலே விழுந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதுடன், ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், "ஒரு மாதம் முன்பு லாரி மோதியதால் இந்த மின் கம்பம் சேதமடைந்தது. அதற்குப் பிறகு எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காத நிலையில், கம்பம் எப்போது விழுமோ என்று பயந்து பயந்து சாலையைக் கடக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்." என்றனர். இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் பேசியும், நேரடியாக விசிட் செய்தும் மோசமான நிலை குறித்து விகடன் தளத்தில் சரிந்துவிழும் நிலையில் மின்கம்பம்... அச்சத்தில் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
விகடன் செய்தி எதிரொலியாக, இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்று, தற்போது அந்த மின் கம்பம் சரிசெய்யப்பட்டிருக்கிறது.