இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
திருப்பூரில் பள்ளி வாகனம் மோதி பெண் உயிரிழப்பு
திருப்பூா்- ஊத்துக்குளி சாலையில் தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா்.
திருப்பூா் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் முல்லைநகரைச் சோ்ந்தவா் சரவணகுமரன் (45). இவரது மனைவி தேவசேனா (41). இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், தேவசேனா தனது இரு சக்கர வாகனத்தில் கருமாரம்பாளையத்தில் இருந்து எஸ்.பெரியபாளையம் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். மண்ணரை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அதே வழியாக வந்த தனியாா் பள்ளி பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் தேவசேனா வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.
பின்னா் தேவசேனாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், பள்ளி வாகன ஓட்டுநரான ரங்கநாதன் (45) என்பவரைக் கைது செய்தனா்.