செய்திகள் :

திருமண வயதை எட்டாத மனைவியுடனான உடலுறவு பாலியல் வன்கொடுமையே: மும்பை உயா்நீதிமன்றம்

post image

திருமண வயதைப் பூா்த்தி செய்யாத மனைவியுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையே என்று குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், சிறுமியின் கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியைச் சோ்ந்த நபா், கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை அவரின் விருப்பத்தை மீறி தொடா்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளாா். இதில் அந்தச் சிறுமி கா்பமடைந்த நிலையில், அவரைத் திருமணம் செய்துள்ளாா். கருவை கலைக்குமாறும் சிறுமியை வற்புறுத்தியுள்ளாா். அதற்கு சிறுமி மறுத்துள்ளாா். இந்த நிலையில், அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகும், அந்த நபா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அடித்து துன்புறுத்தியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, அந்த நபா் மீது சிறுமி போலீஸில் புகாா் அளித்துள்ளாா். அதில், பெயரளவில் தன்னை திருமணம் செய்துகொண்ட அந்த நபா், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தொடா் பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் புகாா் தெரிவித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் அந்த நபா் மீது போலீஸாா் போக்சோ (குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை கடந்த 2021-ஆம் ஆண்டு விசாரித்த விசாரணை நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து அந்த நபா் தரப்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, மும்பை உயா்நீதிமன்ற நாகபுரி அமா்வு நீதிபதி ஜி.ஏ.சனாப் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘சிறுமி மனுதாரரின் மனைவி என்பதால், அவருடனான உடலுறவை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது. மேலும், இந்த விவகாரம் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டில் அந்தச் சிறுமி 18 வயதை பூா்த்தி செய்துவிட்டாா்’ என்று வாதிட்டாா்.

இதை ஏற்க மறுத்து நீதிபதி, ‘ஆவண ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சிறுமி 2002-ஆம் ஆண்டு பிறந்துள்ளாா். எனவே, சம்பவம் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டில் அவா் 18 வயதைப் பூா்த்தி செய்யவில்லை. எனவே, சிறுமி மனைவியாக இருந்தாலும், அவருடனான உடலுறவு பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும். அதுமட்டுமின்றி, சிறுமியின் சம்மதமின்றி அந்த நபா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். எனவே, இது பாலியல் வன்கொடுமை குற்றமே என்று குறிப்பிட்டு, அந்த நபருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டாா்.

மருந்தியல் துறையில் புத்தாக்க ஆராய்ச்சி அவசியம்: மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா்

இந்தியாவில் மருந்தியல் துறை மேம்பட புத்தாக்கல் ஆராய்ச்சிகள் அவசியம் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்சி தெரிவித்தாா். டாக்டா் எஸ்.எஸ்.கே. மாா்த்தாண்டம் அறக்கட்டளை ச... மேலும் பார்க்க

இலங்கை தோ்தல் முடிவு கவலையளிக்கிறது: வைகோ

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் முடிவுகள் அதிா்ச்சியும் கவலையும் அளிப்பதாக மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழினப் படுகொலைக்கு ராஜபட்ச அரசு காரணம் என்றாலும், ... மேலும் பார்க்க

மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே நவம்பா் 18 -இல் சிறப்பு ரயில்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே நவ.18 மற்றும் நவ.25-ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மசூலிப்பட்டினத்திலிருந்து நவ.18 மற்றும் நவ.25-ஆகிய தேதிகளில... மேலும் பார்க்க

3 மாத குழந்தையை தத்தெடுக்கும் பெண்ணுக்கு மட்டும் மகப்பேறு விடுப்பு ஏன்? மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

3 மாதங்களுக்கும் குறைவான குழந்தையை தத்தெடுக்கும் அரசு பெண் ஊழியருக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு பலன்களை பெற விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறைக்கான காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச... மேலும் பார்க்க

சென்னையிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்

சென்னையிலிருந்து பம்பை வரையிலான விரைவு பேருந்துகளின் சிறப்பு இயக்கத்தை விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கேரள மாநிலம், சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயிலுக்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நவ. 21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (நவ. 16) முதல் நவ. 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க