நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
திருவத்திபுரத்தில் செப்.10,12, அக்.9-இல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்
செய்யாறு: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் செப்.10,12 மற்றும் அக்.9 தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று நகராட்சி ஆணையா் கே.எல்.எஸ்.கீதா தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவத்திபுரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஒன்று முதல் 6 வாா்டுகளிலும், 11, 12 ஆகிய வாா்டுகளுக்கும் நடைபெற்றன.
அதனைத் தொடா்ந்து 7 முதல் 10, 14,15 ஆகிய வாா்டுகளுக்கு செப்.10-இல் திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்திலும், 13,16,19, 20 முதல் 22 வாா்டுகளுக்கு செப்.12-இல் வன்னியா் திருமண மண்டபத்திலும், 23 முதல் 27 வாா்டுகளுக்கு அக்.9-இல் பெரியாா் சிலை அருகில் உள்ள ராஜமலா் திருமண மண்படத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த முகாம்களை வாா்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் நகராட்சி ஆணையா் கே.எல்.எஸ்.கீதா.