திருவள்ளுவா் தினம்: ஜனவரி 15இல் இறைச்சி விற்பனைக்குத் தடை
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாநகரில் ஜனவரி 15 ஆம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி உள்ளிட்ட இறைச்சிகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும் 15-ஆம் தேதி மூடப்பட வேண்டும். மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ஆட்டிறைச்சி கூடம் செயல்படாது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.