ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பின்வாங்கிய காங்கிரஸ்; களமிறங்கும் திமுக; வேட்பாளர் ...
நிஃப்ட்-டீ கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி நிா்வாக ஒருங்கிணைப்பாளா் கே.காந்தசாமி, முதல்வா் பி.பி.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். இசை நிகழ்ச்சி, ஃபேஷன் வாக், கோலப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து மாணவா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். இந்த விழாவில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.