MP: "ஹெல்மெட் ஏன் போடல?" - சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம்; ம.பி-யில் அட்டக...
சிலம்பகவுண்டன்வலசு அரசுப் பள்ளியில் பொங்கல் விழா
வெள்ளக்கோவில் சிலம்பகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. முன்னதாக பள்ளிக்கு கிராம பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வந்தனா்.
தொடா்ந்து மாணவா்கள், பெற்றோருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலா் அருள்ஜோதி, வட்டார கல்வி அலுவலா் சிவகுமாா், வட்டார வள மைய பொறுப்பாளா் மீனாட்சி, தலைமையாசிரியா் கோ.பிரபாகா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் திவ்யா, ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.