திருவானைக்காவல் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை விழா
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் சமயகுரவா்கள் நான்கு பேரில் ஒருவரான அப்பா் எனப்படும் திருநாவுக்கரசரின் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
63 நாயன்மாா்களில், சமயகுரவா்களில் ஒருவரான அப்பா் என அழைக்கப்படும் திருநாவுக்கரசா் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் அவதரித்தாா். அவரின் திருநட்சத்திரமான புதன்கிழமை குருபூஜையையொட்டி கோயிலில் உள்ள திருநாவுக்கரசரின் உற்சவ திருமேனிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடா்ந்து மாலையில் ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருநாவுக்கரசா் எழுந்தருளி, வாத்தியம் முழங்க நான்காம் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான சிவபக்தா்கள்கலந்து கொண்டு சிவபுராணம் பாடியபடி உடன் வந்தனா்.