மாடுகளை திருடிய இளைஞா் கைது
ஸ்ரீரங்கம் பகுதியில் மாடுகளை திருடியதாக இளைஞரை புதன்கிழமை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் உள்ள கணபதி தோட்டம் என்ற இடத்தில் திருவள்ளூா் மாவட்டத்தை சோ்ந்த ந. முகுந்தன் (எ) முனீஸ்குமாா் (27) தங்கி மாடுகளை பராமரித்து வருகிறாா். இந்நிலையில் இவா் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள 3 பசுக்கள், ஒரு காளை மாட்டை திருடியதாக மேலூரை சோ்ந்த ரவிச்சந்திரன் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸில் புகாா் கொடுத்தாா். இதையடுத்து முகுந்தனை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த நான்கு மாடுகளை மீட்டனா்.