செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த கடிதத்தில், ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, புதன்கிழமை இரவு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் வந்த போலீஸாா், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மூன்று தளங்களிலும் சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.