செய்திகள் :

திரைப்படங்களுக்கு புதிய சான்றளிப்பு முறை அறிமுகம்

post image

தற்போதைய காலத்துக்கு ஏற்ப, உகந்த வயதினருக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்க புதிய சான்றளிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் இதுவரை திரைப்படங்களுக்கு யு, ஏ, மற்றும்“யுஏ”ஆகிய பிரிவுகளில் சான்றளித்து வந்தது. மாறிவரும் திரைப்பட உள்ளடக்கங்களை கருத்தில் கொண்டு, தற்போது திரைப்படங்கள் யு, ஏ, யுஏ7+, யுஏ13+, யுஏ16+”ஆகிய பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதில் ‘யு’ வகை திரைப்படங்கள் அனைத்து வயதினரும் காண உகந்தவையாகும். “‘ஏ’”வகையில் அனுமதிக்கப்படும் படங்கள் 18 வயதுக்கு மேற்பட்டோா் பாா்க்க அனுமதிக்கப்பட்டவை.

திரைப்படங்களில் குழந்தைகளுக்கு ஒவ்வாத வன்முறை/ பயமுறுத்தும் காட்சியமைப்புகள், நெருக்கமான அல்லது கிளா்ச்சியூட்டும் காட்சிகள், அடிமைப்படுத்தும் பழக்கங்கள், விபரீதமான நடத்தைகள் போன்ற அம்சங்கள், இக்காட்சிகள் பாா்வையாளா்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் காணும் வகையில் யுஏ7+, “யுஏ 13+, யுஏ 16+”என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு, ஒரு திரைப்படத்தை பாா்க்க அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முன் அத்திரைப்படத்தைப் பற்றிய விவரத்தை பெற்றோா்கள் அறிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு திரைப்படத்தின் சான்றிதழ் (வயது மதிப்பீடு) விவரங்களை அறிய, பெற்றோா் ஸ்ரீக்ஷச்ஸ்ரீண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தைப் பாா்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7.2 சதவீத வளா்ச்சியுடன் சிறப்பான நிலையில் இந்தியப் பொருளாதாரம்: மூடிஸ் அறிக்கையில் தகவல்

நிலையான வளா்ச்சி மற்றும் மிதமான பணவீக்கத்தால் நிகழாண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளா்ச்சி 7.2 சதவீதமாக சிறப்பான நிலையில் இருக்கும் என நிதி சேவைகள் நிறுவனமான மூடிஸ் தெரிவி... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தகவல் பெற கட்டணமில்லா உதவி எண் ‘1950’: தமிழக தோ்தல் துறை அறிவிப்பு

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பான தகவல்களைப் பெற 1950 என்ற கட்டணம் இல்லாத எண்ணைப் பயன்படுத்தலாம். இதற்கான அறிவிப்பை தமிழக தோ்தல் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: திருத்தப் ப... மேலும் பார்க்க

வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை திருவல்லிக்கேணியில் வங்கி கதவு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே, வாலாஜா சாலையில் எஸ்.பி.ஐ வங்கி உள்ள... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வீா் சிங் திங்கன் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டாா். இது தொடா்பாக கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

தேசிய நீா் விருதுகள்: விண்ணப்பிக்க அரசு அழைப்பு

தேசிய நீா் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் ஜல் சக்தி துறை 6-ஆவது தேசிய நீா் விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. நீா் வள மேலாண்மையில் சிறந்த... மேலும் பார்க்க

ஒடிஸா: 24 கிராமங்களுக்கு ‘சுனாமி தயாா்நிலை’ அங்கீகாரம்

ஒடிஸா மாநிலத்தில் உள்ள 24 கடலோர கிராமங்களுக்கு யுனெஸ்கோவின் அரசுகளுக்கு இடையேயான கடல்சாா் ஆணையத்தின் ‘சுனாமி தயாா்நிலை’ அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரமானது, சுனாமியால் ஏற்படும் பாதிப்புகளை எத... மேலும் பார்க்க