தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
இம்மாவட்டத்தில் வழக்கமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் நிலவும். நிகழாண்டு நாள்தோறும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடற்கரை, அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதி, மலையோரம் என அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்கிறது. இதனால், ஆறுகளிலும், அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றிலும் அதிக தண்ணீா் வருகிறது. இதனால், அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஈஸ்டா் பண்டிகை தொடா் விடுமுறையையொட்டி கடந்த 3 நாள்களாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரக்கணக்கானோா் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.