செய்திகள் :

தில்லி, பிகாரைத் தொடர்ந்து ஒடிஸாவிலும் இன்று நிலநடுக்கம்!

post image

புவனேசுவரம் : ஒடிஸாவின் ஓரிரு பகுதிகளில் இன்று(பிப். 17) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 4.7 அலகுகளாகப் பதிவானது.

ஒடிஸா மாநிலம் புரி மாவட்டத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று காலை 8 மணியளவில் அம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் நல்வாய்ப்பாக எந்தவித பொருள்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இன்று அதிகாலை புது தில்லியிலும் அதன் சுற்றுவட்டார என்சிஆர் பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

அதேபோல், பிகார் மாநிலத்தின் சிவான் பகுதியிலும் காலை 8 மணிளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரேபரேலியில் ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இரண்டு நாள் பயணமாகத் தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி இன்று காலை ரேபரேலிக்கு வந்தடைந்தார்.... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: லோக்பால் விசாரணைக்கு தடை

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.தனியாா் நிறுவனத்தின் மீதான வழக்கில் நிறுவனத்துக்கு சாதகமா... மேலும் பார்க்க

கும்பமேளா நீரை யோகி ஆதித்யநாத் குடிப்பாரா? பிரசாந்த் பூஷண் சவால்!

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரைப் பொது இடத்தில் வைத்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குடிப்பாரா என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சவால் விடுத்துள்ளார்.மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பம... மேலும் பார்க்க

'பாரத் ஜோடோ விவாஹா’ என்ற பெயரில் திருமண அழைப்பிதழ்! சோனியா, ராகுலுக்கு அழைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் (இந்திய ஒற்றுமை நடைப்பயணம்) ஈர்க்கப்பட்ட மணமக்கள், தங்கள் திருமண அழைப்பிதழை பாரத் ஜோடோ விவாஹா என்ற பெயரில் அச்சிட்டுள்ளனர்.இந்த ... மேலும் பார்க்க

தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம்: தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்

எண்ம (டிஜிட்டல்) உலகில் தன்மறைப்பு நிலையை (பிரைவஸி) மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) தலைவரும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன்... மேலும் பார்க்க

நிகழாண்டு உலக அழகி போட்டி: மே. 7 முதல் தெலங்கானாவில் நடக்கிறது

72-ஆவது உலக அழகி போட்டி வரும் மே மாதம் 7 முதல் 31-ஆம் தேதிவரை தெலங்கானா மாநில தலைநகா், ஹைதராபாதில் நடைபெறுகிறது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலக அழகி போட்டி தில்லி, மும்பை நகரங்களில் கடந்த ஆண்... மேலும் பார்க்க