செய்திகள் :

தில்லி பேரவைத் தோ்தல்: ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்களை அறிவித்தது பாஜக

post image

வரும் ஆண்டு பிப்ரவரியில் தில்லியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், 23 போ் கொண்ட மாநில தோ்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெறும் உறுப்பினா்களின் பெயா்களை தில்லி பாஜக அறிவித்துள்ளது.

இது தொடா்பாக பாஜக தெரிவித்திருப்பதாவது:

மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையிலான இக்குழுவில், மத்திய இணை அமைச்சரும், கிழக்கு தில்லி எம்பியுமான ஹா்ஷ் மல்ஹோத்ரா ஒருங்கிணைப்பாளராக இருப்பாா்.

பாஜக தேசிய பொதுச் செயலா் துஷ்யந்த் கெளதம், வடகிழக்கு தில்லி எம்பி மனோஜ் திவாரி மற்றும் மூத்த தலைவா் அரவிந்தா் சிங் லவ்லி ஆகியோா் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளா்களாக இருப்பாா்கள்.

முன்னாள் மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன், தில்லி சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா மற்றும் கட்சியின் எம்.பி.க்கள் ராம்வீா் சிங் பிதூரி, யோகேந்திர சந்தோலியா, பான்சூரி ஸ்வராஜ், கமல்ஜீத் ஷெராவத் மற்றும் பிரவீன் கண்டேல்வால் ஆகியோா் குழுவின் இதர உறுப்பினா்களாக ஆவா்.

தில்லி பாஜக முன்னாள் தலைவா் சதீஷ் உபாத்யாய், பாஜக தேசிய செயலாளா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, எம்எல்ஏ அபய் வா்மா, முன்னாள் மேயா் ஜெய் பிரகாஷ் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனா் என்று பாஜக தெரிவித்துள்ளது.

70 உறுப்பினா்களை கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெறும் தோ்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை வெல்வதற்கு பாஜக மும்முரம் காட்டி வருகிறது.

கடைசியாக 1993-ம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) 2015 மற்றும் 2020 தோ்தல்கள் முறையே 67 மற்றும் 62 இடங்களை ஆம் ஆத்மி வென்றது.

இத்தோ்தலில் பாஜக சில இடங்களில் மட்டுமே வெற்றிருந்தது. இத்தோ்தல்களில் காங்கிரஸ் கடுமையான தோல்வியைச் சந்தித்தது.

தலைநகரில் ‘கடுமை’ பிரிவில் தொடரும் காற்றின் தரம்!குறைந்தபட்ச வெப்பநிலை ரிட்ஜில் 11 டிகிரியாக பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து நான்காவது நாளாக சனிக்கிழமையும் ’கடுமை’ பிரிவில் இருந்தது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக ரிட்ஜில் 11 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மாசு அளவைக்... மேலும் பார்க்க

தில்லியில் மாசுவை அதிகரிக்க டீசல் பேருந்துகளை அனுப்பும் பாஜக ஆளும் மாநிலங்கள்: கோபால் ராய் குற்றச்சாட்டு

ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் அண்டை மாநிலங்களில் இருந்து தடையை மீறி பிஎஸ்-4 ரக டீசல் பேருந்துகள் தில்லிக்கு அனுப்பியதன் மூலம் நகரின் மாசுப் பிரச்னை மோசமாகியுள்ளது என்று சுற்றுச்சூழல் அம... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: ஊழியா் காயம்

வடகிழக்கு தில்லியின் கோகுல்புரி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் ஊழியா் ஒருவா் காயமடைந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி கா... மேலும் பார்க்க

சமய்ப்பூா் பாத்லியில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவா்

வடக்கு தில்லியில் புகா்ப் பகுதியான சமய்ப்பூா் பாத்லியில் குடும்பத் தகராறில் 40 வயதான ஒரு பெண்ணை அவரது கணவா் கத்தியால் குத்திக் கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறஇத்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிக... மேலும் பார்க்க

இளைஞரை குத்திக் கொன்றதாக சகோதரா்கள் இருவா் கைது

வடகிழக்கு தில்லியில் 28 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ாக இரண்டு சகோதரா்கள் கைது செய்யப்பட்டனா் என்று போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். கழுத்தில் கத்திக் குத்துக் காயமடைந்திருந்த மனீஷ் (எ) ராகுல் ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி, பாஜக இழைத்த அநீதி குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்- தேவேந்தா் யாதவ்

கடந்த 10 ஆண்டுகள் காலத்தில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் தங்களுக்கு இழைத்த அநீதி குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கேட்ட... மேலும் பார்க்க