`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
தில்லி முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்வாதி மாலிவால்!
தில்லி முதல்வர் பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் கலந்துகொண்டுள்ளார்.
தில்லி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்னும் சற்றுநேரத்தில் தில்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கவுள்ளது.
முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதையும் படிக்க : தில்லி: 6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு! யார்யார்?
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருகைதந்துள்ளார். முதல்வராகவுள்ள ரேகா குப்தாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் தன்னை தாக்கியதாக குற்றச்சாட்டை எழுப்பிய ஸ்வாதி மாலிவால், அக்கட்சியின் தலைவர்களுக்கு எதிரான கருத்துகளை சமீபகாலமாக வெளியிட்டு வந்தார்.
தில்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு அரவிந்த் கேஜரிவாலின் ஆணவம்தான் காரணம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஆம் ஆத்மியின் தோல்விக்கு கட்சிக்கு எதிராக ஸ்வாதி மாலிவால் போர்க்கொடி தூக்கியதே காரணம் என்றும், அவருக்கு பாஜக அமைச்சரவையில் பதவி வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்துள்ளது.