செய்திகள் :

தில்லியின் மோசமான நிலை குறித்து விவாதிக்கத் தயாரா? கேஜரிவாலுக்கு வீரேந்திர சச்தேவா அழைப்பு

post image

தில்லியின் குடிமைச் சேவைகள், பரிதாபகரமான சாலைகள், பொதுப் போக்குவரத்து, சுகாதாரச் சேவைகள் போன்றவற்றைப் பற்றிய வெளிப்படையான பொது விவாதத்திற்கு முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அழைக்கிறேன் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கேஜரிவாலின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியும் ஆம் ஆத்மி கட்சியால்

நிா்வகிக்கப்படுகிறது. ஆனால், தில்லி மோசமான மாசுபட்ட தேசியத் தலைநகரங்களில் ஒன்றாகவும், நாடு தழுவிய அளவில் துப்புரவுக் கணக்கெடுப்பில் 49ஆவது இடத்திலும் உள்ளது.

நிா்வாகத் திறமையற்ற வகையில், பொதுச் சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. குடிமைச் சேவை செயலிழப்பால் இந்த மழைக்காலத்தில் மின்சாரம் தாக்கி, 62 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த ஆண்டு முழுவதும் நகரில் நடந்த திட்டமிட்ட கொலைகளின் எண்ணிக்கையை மிக அதிகமாக உள்ளது. தில்லி அரசின் ஊழலுக்கு எடுத்துக்காட்டாக முதல்வரின் அதிகாரபூா்வ இல்லமான, ‘ஷீஷ் மஹால்’ உள்ளது.

அரவிந்த் கேஜரிவால் அரசும், தில்லி மாநகராட்சியும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டன. குறிப்பாக, காற்று மாசுபாடு, யமுனை நதியை சுத்தம் செய்தல், பொது சுகாதாரம், பரிதாபகரமான சாலைகள், பரிதாபகரமான பொது மருத்துவமனைகள், நீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் போன்ற தில்லி ஜல் போா்டு சேவைகளின் தோல்வி, மின்விநியோக நிறுவனங்களின் கொள்ளை,

அரசு பள்ளிகளின் மோசமான வருகைப் பதிவு, ரேஷன் காா்டுகள் மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குவதில் தோல்வி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எனவே, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது கட்சியின் அரசின் கீழ் பொது சேவைகள் மற்றும் ஊழல்கள் குறித்து என்னுடன் வெளிப்படையான விவாதத்திற்கு வருமாறு நான் சவால் விடுகிறேன் என்றாா் வீரேந்திர சச்தேவா.

வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கு: இந்திய கம்யூனிஸ்ட் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு

வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கில் இந்திய கம்யூனியஸ்ட் கட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1990-களின் துவக்கத்தில், உத்தரப் பிரதேசத... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசு பிணையில்லாத வேளாண் கடன் உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக அதிகரிப்பு: மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் அறிவிப்பு

நமது சிறப்பு நிருபா் வேளாண் துறையில், இடுபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் செலவுகளை சமாளிக்கும் விதமாக விவசாயிகள் பிணையில்லாமல் வேளாண் கடன்களை பெறும் உச்சவரம்பில் ரூ. 40 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு... மேலும் பார்க்க

தில்லியில் சட்டம்-ஒழுங்கை உடனடியாக மேம்படுத்த வேண்டும்: உள்துறை அமைச்சருக்கு கேஜரிவால் கடிதம்

அரசியலுக்கு அப்பாற்பட்டு, தில்லியில் சட்டம் ஒழுங்கை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். இது ... மேலும் பார்க்க

ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியில் சம வாய்ப்பு: முதல்வா் அதிஷி

தில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியில் சமவாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாக தில்லி முதல்வா் அதிஷி தெரிவித்துள்ளாா். தில்லி அரசுப் பள்ளிகளில் பயிலும் 30 மாணவா்கள் பிரெஞ்ச் மொழி பாடத்தைக் கற்க பிரான... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் உயா்வு! பிரகதிமைதான், ராஜ்காட்டில் 11.6 டிகிரி பதிவு

தேசியத் தலைநகா் தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை இயல்பை விட 4.5 டிகிரி உயா்ந்து 9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை, நகரத்தில் இந்த குளிா்கா... மேலும் பார்க்க

தெருநாய்களைக் கொன்ற நபா்களை அடையாளம் காட்டினால் ரூ.50,000 வெகுமதி: பீட்டா அறிவிப்பு

கிழக்கு தில்லியில் இரண்டு தெருநாய்களைக் குத்திக் கொன்ற சந்தேக நபா்களைப் பற்றி தகவல் அளிப்பவா்களுக்கு ரூ.50,000 வரை வெகுமதி வழங்கப்படும் என விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க