செய்திகள் :

தில்லியில் ஒரே நாளில் 90 விமானங்கள் ரத்து!

post image

தில்லி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் 90 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் அந்நாட்டிலுள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து காணப்படும் நிலையில் இருநாடுகளும் தங்களது வான்வழித் தடங்களை மூடியதுடன், விமானங்களின் போக்குவரத்தை மிகப் பெரியளவில் குறைத்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலுள்ள 27 விமான நிலையங்கள் மூடப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதில், தலைநகர் தில்லியின் விமான நிலையத்தில் 11 வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்து உள்பட மொத்தம் 90 விமானங்களின் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று (மே 8) காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரையில், அங்கிருந்த புறப்பட வேண்டிய 46 விமானங்கள் மற்றும் வரவிருந்த 33 விமானங்களின் போக்குவரத்து ரத்தாகியுள்ளன.

இருப்பினும், தில்லி விமான நிலையத்தின் 4 விமான ஓடுபாதை வழக்கம் போல் செயல்பட்டதாகவும், வான்வழித் தடங்களின் மாற்றத்தினால் சில விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை! இது 2-வது முறை!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தை! சிந்தூரி என பெயரிட்ட பெற்றோர்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைபெற்ற நாளில் பிறந்த பெண் குழந்தைக்கு பிகாரைச் சேர்ந்த பெற்றோர் சிந்தூரி எனப் பெயரிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காமில்... மேலும் பார்க்க

பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.‘உச்சநீதிமன்றம் சட்டம் இயற்றினால், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையை மூடிவிட வேண்டும். நாட்டில் நிகழும் மதச் சண்டைகளுக்கு தலைம... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: மேற்கு வங்கத்தில் அரசுப் பணியாளர்கள் விடுப்பு ரத்து!

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக மேற்கு வங்க அரசு அனைத்து அரசுப் பணியாளர்களில் விடுமுறைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் ... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குக்கு பாகிஸ்தான் ராணுவ மரியாதை: விக்ரம் மிஸ்ரி

புது தில்லி: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் ஏவுகணை, டிரோன்கள் நடுவானில் தாக்கி அழிப்பு! - கர்னல் சோபியா குரேஷி

பாகிஸ்தானின் ஏவுகணை, டிரோன்கள் நடுவானில் தாக்கி அழிக்கப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி விளக்கமளித்துள்ளார். மேலும் பார்க்க

பாகிஸ்தான் படங்களுக்கு தடை! ஓடிடி தளங்களுக்கு உத்தரவு!

பாகிஸ்தானின் திரைப்படங்களை ஓடிடி தளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாக, பாகிஸ்தானில் தயாரான அல்லது எடுக்கப்பட்ட திரைப்படங்கள், இணையத் தொடர... மேலும் பார்க்க