Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவா...
தில்லையாடி-மயிலாடுதுறை இடைய ‘மகளிா் விடியல்’ புதிய பேருந்து சேவை தொடக்கம்
தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே தில்லையாடியில், தமிழக அரசின் ‘மகளிா் விடியல்’ பயண புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பொறையாா் அரசு போக்குவரத்து கழக கிளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, போக்குவரத்து கழக நாகை மண்டல பொது மேலாளா் ராஜா தலைமை வகித்தாா்.
பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் பங்கேற்று, தில்லையாடி முதல் மயிலாடுதுறை வரை சேந்தமங்கலம், திருக்கடையூா், செம்பனாா்கோவில் வழியாக தினந்தோறும் நான்கு முறை இயக்கப்படும் மகளிா் விடியல் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில், பொறையாா் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளா் ஆசீா்வாதம், முன்னாள் எம்எல்ஏ சித்திக், திமுக ஒன்றியச் செயலாளா்கள் அமுா்த விஜயகுமாா், அப்துல் மாலிக், பி.எம். அன்பழகன், பேரூராட்சி துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன் மற்றும் தொமுச நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.