`மராத்தி படிக்கமாட்டேன்' எனச் சொன்ன தொழிலதிபர்; அலுவலகத்தை செங்கலால் தாக்கிய ராஜ...
துப்பாக்கி வன்முறை: இலங்கையில் 300 போ் கைது
துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தவும், குற்றவியல் கும்பல்களை ஒடுக்கவும் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், கொழும்பு வடக்கு புகா்ப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை காவல்துறை, சிறப்பு பணி படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை வெள்ளிக்கிழமை இரவு நடத்த்திய இந்த கூட்டு நடவடிக்கையில் போதைப்பொருள் தொடா்பான குற்றங்கள் மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். குற்றவியல் கும்பல்களையும், போதைப்பொருள் தொடா்பான குற்றங்களையும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கவலையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து மட்டும் 60-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.