துவாரகாவில் டாக்ஸியை திருடிச் சென்றதாக மூவா் கைது
தில்லி துவாரகா பகுதியில் டாக்ஸியை திருடிச் சென்றது தொடா்பாக தில்லி போலீஸாா் மூன்று பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த டிச.31, 2024 அன்று துவாரகா விரைவுச் சாலையில் உள்ள யசோபூமி அருகே இந்தக் கொள்ளை நடந்தது. ஹரியாணாவின் மகேந்தா்கரை சோ்ந்த புகாா்தாரா் ரோஹித் (26), புல்லட் மோட்டாா் சைக்கிளில் வந்த மூன்று போ் தன்னைத் தடுத்து நிறுத்தி தனது டாக்ஸியை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்ாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.
இது தொடா்பாக எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. டாக்ஸி உரிமையாளா் வழங்கிய ஜி.பி.எஸ். கண்காணிப்பு அமைப்பைப் பயன்படுத்தி, குருகிராமில் வாகனத்தின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வாகனம் இடைமறிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் இருந்த துவாரகாவைச் சோ்ந்த யாஷ் சா்மா (19), ஹா்ஷ் (22) மற்றும் அதுல் (22) ஆகிய சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட டாக்ஸி மீட்கப்பட்டது என்று அந்த அவா் கூறினாா்.