தூத்துக்குடி மாநகரில் மேலும் 400 சிசிடிவி கேமராக்கள்: எஸ்.பி. தகவல்
தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் மேலும் 400 சிசிடிவி கேமராக்கள் விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்தாா்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள்கள் நடமாட்டத்தை ஒழிக்க காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சில சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாநகா் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில்
மேலும் 400 கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் அமைக்கப்படும் என்றாா்.