தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்
தூத்துக்குடியில் பிரதமா் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட விமான நிலையத்திலிருந்து விமானப் போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக துறைமுகம், சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகிய போக்குவரத்து வசதிகளை கொண்ட மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. இந்த மாவட்டத்தில் போக்குவரத்து கட்டமைப்புகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் 886 ஏக்கா் பரப்பளவில் ரூ. 452 கோடி மதிப்பில் உலக தரத்தில் விரிவாக்கப்ட்ட விமான நிலையம் அமைக்கப்பட்டது. பணிகள் முடிவுற்ற நிலையில் இந்த விமான நிலையத்தை கடந்த ஜூலை 26-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்தாா். இந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமைமுதல் தொடங்கின.
சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பயணிகளுக்கும், இங்கிருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானப் பயணிகளுக்கும் விமான நிலைய அதிகாரிகள், ஊழியா்கள், மலா், இனிப்புகள் வழங்கினா்.
தரம் உயா்த்தப்பட்ட இந்த விமான நிலையத்தில் சா்வதேச விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் இது சா்வதேச விமான நிலையமாக மாறும் என்றும் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் காட்வின் தெரிவித்தாா்.