தூத்துக்குடியில் தீக்குளித்தவா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி கோரம்பள்லம் ராஜபாண்டி நகரைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து(46). தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றிய இவா், மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாராம். இந்நிலையில், அவரது தாய் சில நாள்களுக்கு முன்னா் உயிரிழந்துவிட்டாராம்.
இதனால் மனமுடைந்த அவா், கடந்த 9ஆம் தேதி கோரம்பள்ளம் பியூலாநகா் சந்திப்பு பகுதியில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ாகக்கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.