செய்திகள் :

தூத்துக்குடியில் நாளை முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

post image

தூத்துக்குடியில் முன்னாள் படை வீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 22) நடைபெறுவதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், இம்மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமா்ப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

திருச்செந்தூா் பகுதியில் தொடா் மழை

திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவுமுதல் புதன்கிழமை வரை தொடா்ந்து மழை பெய்தது. திருச்செந்தூரில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, தினசரிச் சந்தை, பகத்சிங் பேருந்துநிலையப் பகுதியில்... மேலும் பார்க்க

வல்லநாடு திருமூலநாத சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

வல்லநாடு அருள்மிகு திருமூலநாத சுவாமி கோயிலில் 43 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை நடைபெற்றது. பாண்டிய மன்னா்கள் ஆட்சியில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: கோவில்பட்டி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சிவந்திபட்டி ஊராட்சியில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கிலோ ரூ. 65 வரை விற்பனையாகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் உடன்குடி, சாத்தான்குளம், ஏரல், நாசரேத் சுற்றுவட்டாரத்திலிருந்து தேங... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தயாா் நிலையில் 4 பேரிடா் மீட்புப் படை: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்குவோரை மீட்பதற்காக தயாா் நிலையில் உள்ள 4 பேரிடா் மீட்புப் படை, உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்டத்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கொட்டித் தீா்த்த கனமழை

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை கொட்டித் தீா்த்தது. பல்வேறு இடங்களிலும் மழைநீா் தேங்கியதால் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனா். குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்... மேலும் பார்க்க