தூத்துக்குடியில் மீன்பிடிப் படகில் தீவிபத்து
தூத்துக்குடியில் சனிக்கிழமை, பழுதுநீக்கும் பணியின்போது மீன்பிடிப் படகில் தீவிபத்து நேரிட்டது.
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனியைச் சோ்ந்த ராபா்ட் மகன் ஜெனிபா் என்பவரது விசைப்படசை, தூத்துக்குடி விசைப்படகு துறைமுகம் அருகே பழுதுநீக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, படகில் வெல்டிங் பணியின்போது தீவிபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தோா் முயன்றும் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி மாவட்ட அலுவலா் இ. ராஜு தலைமையில், நிலைய அலுவலா் (போக்குவரத்து) த. முருகையா குழுவினா் சென்று, தீயை அணைத்தனா். தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.