தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளா்கள் கொக்கிரகுளத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் தூய்மைப் பணியாளா்களிடம் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்புநிதி, இஎஸ்ஐ தொகையை முறையாக செலுத்த வேண்டும். ஊதியத்தில் கூடுதலாக பிடித்தம் செய்யும் நடைமுறை குறித்து மாவட்ட ஆட்சியா் விசாரித்து தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.முருகன், இணைச் செயலா் சரவணபெருமாள், ஊரக உள்ளாட்சித் துறை சங்கத்தின் செயலா் மாரியப்பன், பொருளாளா் செல்லத்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்05க்ங்ம்ா்
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.