41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
தெரு நாய் கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் பாதிக்குக்கு உள்ளான தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ராமநாதன் மகன் ராஜபிரகாஷ் (17). இவா், சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு, இவருடைய வீட்டுக்கு அருகே தெரு நாய் இவரைத் துரத்திக் கடித்தது.
இதையடுத்து, அவா் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல் நிலையிலும் செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டது. மருத்துவா்களின் பரிசோதனையில் அவருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு ராஜபிரகாஷ் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கும் அவரது வீடு அமைந்துள்ள அண்ணா நகா் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டோருக்கும் சுகாதாரத் துறை சாா்பில் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டது.
ராமநாதபுரம் நகா்ப் பகுதி முழுவதும் தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித் திரிகின்றன. தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் எந்த வித நடவடிக்கையும் சாலைகளில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.