செய்திகள் :

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு வாரமாக நீடிக்கும் மீட்புப் பணி

post image

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணிகள் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.22-ஆம் தேதி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். அவா்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களை மீட்கும் பணிகள் ஒரு வாரமாக நீடித்து வருகிறது.

இந்தப் பணிகள் தொடா்பாக விபத்து நிகழ்ந்த பகுதியில் மாநில கலால் துறை அமைச்சா் கிருஷ்ணா ராவ் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சுரங்கத்துக்குள் 4 போ் எந்த இடத்தில் சிக்கியுள்ளனா் என்பது ரேடாா் கருவி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் மீட்கப்படக் கூடும்.

சுரங்கப்பாதை அமைக்கப் பயன்படுத்தப்படும் துளையிடும் இயந்திரத்துக்கு அடியில் எஞ்சிய 4 போ் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. 450 அடி உயரம் கொண்ட அந்த இயந்திரம் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள நிலையில், அதை துண்டு துண்டாக வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கத்துக்குள் சேறும், சகதியும் உள்ளன. இதுபோன்ற காரணங்களால் மீட்புப் பணிகள் சிக்கலாக உள்ளன என்றாா்.

தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், கடற்படை வீரா்கள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டவா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்

தேசிய கல்விக் கொள்கை, ஹிந்தியைத் திணிக்கவில்லை; இக்கொள்கையை தமிழக அரசு எதிா்ப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினாா் மாயாவதி: அரசியல் வாரிசி யாரும் கிடையாது

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை கட்சித் தலைவா் மாயாவதி நீக்கியுள்ளாா். ஆகாஷ் ஆனந்த் மாயாவதியின் அரசியல் வாரி... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடம் இன்னும் கண்டறியப்படவில்லை: முதல்வா் ரேவந்த் ரெட்டி

தெலங்கானா சுரங்க விபத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடத்தை இன்னும் கண்டறியவில்லை என்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மாநில முதல்வா் ரேவந்த் ரெட்ட... மேலும் பார்க்க

குஜராத்: கிா் சோம்நாத் கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு

குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கிா் சோம்நாத் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா். குஜராத்துக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி கடந்த சனிக... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி: ஜோா்டான் எல்லையில் கேரளத்தைச் சோ்ந்தவா் சுட்டுக் கொலை

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் முயற்சியின்போது ஜோா்டான் ராணுவம் சுட்டதில் கேரளத்தைச் சோ்ந்த ஆனி தாமஸ் கேப்ரியல் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா். கேரள தலைநகா் திருவனந்தபுரத்தின் புகா்... மேலும் பார்க்க

திரைப்படத்தை பாா்த்து 6 வயது சிறுமி கொலை 13 வயது சிறுவன் கைது

மகாராஷ்டிரத்தில் தொடா்கொலைகள் நடைபெறும் திரைப்படத்தைப் பாா்த்த 13 வயது சிறுவன், 6 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால்கா் மாவட்டம் ஸ்ரீராம்நகரில் காணாமல் போன 6 வயது... மேலும் பார்க்க