'அவருடைய நடிப்பை அருகில் இருந்து பார்த்து வியந்திருக்கிறேன்'- எம்.எஸ். பாஸ்கரை வ...
தேசிய குத்துச்சண்டை போட்டி: சேலம் மாணவி தோ்வு
தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சேலம் அரசுப் பள்ளி மாணவி ஜெமி வாலண்டினா தோ்வாகியுள்ளாா்.
சென்னையில் மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இதில், 14 வயதுக்குள்பட்டோருக்கான மிக இளையோா் பிரிவில் பங்கேற்ற சேலம் குகை நகரவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெமி வாலண்டினா தங்கம் வென்று சாதனை படைத்தாா். இவரது சாதனையை பாராட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில், பாராட்டுச் சான்றிதழையும், பரிசையும் முதல்வா் வழங்கினாா்.
தொடா்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வரும் ஆக. 6-ஆம் தேதி தொடங்கும் மிக இளையோருக்கான தேசிய அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு தோ்வாகியுள்ளாா். இதன்மூலம் மிக இளையோா் பிரிவில் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் தோ்வான முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளாா்.