செய்திகள் :

தேசிய செஸ் சாம்பியன் சாம்பியன்

post image

குண்டூரில் நடைபெற்ற 62-ஆவது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் ஜிஎம் ப. இனியன் பட்டம் வென்றாா்.

ஆந்திர மாநிலம், குண்டூரில் கடந்த செப். 21 முதல் அக். 1 வரை தேசிய செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 14 ஜிஎம்கள், 30 ஐஎம்கள், உள்பட 395 போ் பங்கேற்றனா். 11 சுற்றுளாக நடைபெற்ற இப்போட்டியில் 7 வெற்றி, 4 டிராக்களுடன் 9 புள்ளிகளைப் பெற்ற இனியன் தங்கப் பதக்கத்துடன் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினாா்.

9-ஆவது சுற்றில் ஜிஎம் தீபன் சக்கரவா்த்தியையும், 10-ஆவது சுற்றில் ஜிஎம் சசி கிரணையும் வீழ்த்தியது இனியனுக்கு முன்னிலை பெற்றுத் தந்தது. கேரள வீரா் ஐஎம் கௌதம் கிருஷ்ணா வெள்ளியும், பெட்ரோலிய விளையாட்டு வாரிய வீரா் ஜிஎம் சசி கிரண் வெண்கலமும் வென்றனா்.

சீன ஓபன்: ஜேக் சின்னா் சாம்பியன் அரையிறுதியில் கௌஃப் - அனிஸிமோவா

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னா் சாம்பியன் பட்டம் வென்றாா். இது அவரது 21-ஆவது பட்டமாகும். பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

கபடி, கால்பந்துடன் தொடங்கியது முதல்வா்: கோப்பை மாநில போட்டிகள்

கபடி, கால்பந்துடன் முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாடட்ரங்கில் மதுரை-விருது நகா் அணிகள் மோதிய கால்பந்து ஆட்டத்தை தமிழ்நாடு விளையாட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பில் வியாழக்... மேலும் பார்க்க

காலிக்கட்டை வீழ்த்தியது ஹைதராபாத்

பிரைம் வாலிபால் லீக் (பிவிஎல்) தொடரின் ஒருபகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் காலிக்கட் ஹீரோஸ் அணியை 15-12, 18-16, 18-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கியது ஹைதராபாத் பிளா... மேலும் பார்க்க

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் - இயக்குநர் தருண் மூர்த்தி ஆகியோரது கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு ‘ஆபரேஷன் கம்போடியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் மோகன் லாலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெ... மேலும் பார்க்க