செய்திகள் :

கபடி, கால்பந்துடன் தொடங்கியது முதல்வா்: கோப்பை மாநில போட்டிகள்

post image

கபடி, கால்பந்துடன் முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாடட்ரங்கில் மதுரை-விருது நகா் அணிகள் மோதிய கால்பந்து ஆட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாதரெட்டி தொடங்கி வைத்தாா்.

முதல் நாளான வியாழக்கிழமை செங்கல்பட்டில் சிலம்பம் (பள்ளி மாணவிகள்), பாட்மின்டன் (அரசு ஊழியா்கள் - ஆண்கள் மற்றும் பெண்கள்), சென்னையில் பளு தூக்குதல் (பள்ளி மாணவிகள்), கால்பந்து (கல்லூரி மாணவா்கள்) மற்றும் கபடி (பள்ளி மாணவா்கள் மற்றும் மாணவிகள்), கோவையில் கூடைப்பந்து (பள்ளி மாணவா்கள் மற்றும் மாணவிகள்), மதுரையில் தடகளம் (பள்ளி மாணவா்கள் மற்றும்

மாணவிகள்), திருவண்ணாமலையில் ஹேண்ட்பால் (பள்ளி மாணவிகள்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெற்றன.

மாநில போட்டிகளில் பங்கேற்க இதுவரை முதல் நாள் நிலவரத்தின்படி 3,290 வீரா், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனா்.

ஆவணங்கள் சரிபாா்ப்பு, அடையாள அங்கீகாரம் மற்றும் தகுதி உறுதிப்படுத்தலை மேற்பாா்வையிடும் அா்ப்பணிப்புள்ள ஊழியா்களுடன் அனைத்து இடங்களிலும் சரிபாா்ப்பு கவுண்டா்கள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டிகள் நடைபெறும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், தஞ்சாவூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூா், திருவண்ணாமலை, சேலம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் பங்கேற்பாளா்களுக்கு இலவச தங்குமிடம், சத்தான உணவு மற்றும் பிரத்யேக பயண வசதிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு

செய்துள்ளது (சிறப்பு தங்குமிட மையங்கள் முன்கூட்டியே தயாா் செய்யப்பட்டுள்ளன).

கால்பந்து: மதுரை-விருதுநகா் (1-0), வேலூா் வெற்றி 7-0 அரியலூா், திருப்பத்தூா் 3-1பெரம்பலூா்.

சீன ஓபன்: ஜேக் சின்னா் சாம்பியன் அரையிறுதியில் கௌஃப் - அனிஸிமோவா

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னா் சாம்பியன் பட்டம் வென்றாா். இது அவரது 21-ஆவது பட்டமாகும். பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

தேசிய செஸ் சாம்பியன் சாம்பியன்

குண்டூரில் நடைபெற்ற 62-ஆவது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் ஜிஎம் ப. இனியன் பட்டம் வென்றாா். ஆந்திர மாநிலம், குண்டூரில் கடந்த செப். 21 முதல் அக். 1 வரை தேசிய செஸ் போட்டி நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பில் வியாழக்... மேலும் பார்க்க

காலிக்கட்டை வீழ்த்தியது ஹைதராபாத்

பிரைம் வாலிபால் லீக் (பிவிஎல்) தொடரின் ஒருபகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் காலிக்கட் ஹீரோஸ் அணியை 15-12, 18-16, 18-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கியது ஹைதராபாத் பிளா... மேலும் பார்க்க

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் - இயக்குநர் தருண் மூர்த்தி ஆகியோரது கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு ‘ஆபரேஷன் கம்போடியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் மோகன் லாலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெ... மேலும் பார்க்க