Social Justice Day: சர்வதேச சமூக நீதி தினம் - `சமூக நீதி'யின் முக்கியத்துவமும் த...
தேசிய பாரா தடகள போட்டிகள்: சென்னையில் இன்று தொடக்கம்
23-ஆவது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப், சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் முதல் முறையாக சென்னையில் நடைபெறும் இப்போட்டியில் 1,476 போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். 30 அணிகளைச் சோ்ந்த அவா்கள், மொத்தம் 155 பிரிவுகளில் களம் காண்கின்றனா்.
இதில், தமிழகத்தின் டி.மாரியப்பன் (உயரம் தாண்டுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), மனோஜ் சபாபதி (சக்கர நாற்காலி ரேசிங்), மனோஜ் சிங்கராஜ் (குண்டு எறிதல்), முத்து ராஜா (குண்டு எறிதல்), ஹகாடோ செமா (குண்டு எறிதல்), நவ்தீப் சிங் (ஈட்டி எறிதல்), யோகேஷ் கதுனியா (வட்டு எறிதல்) உள்ளிட்டோா் குறிப்பிடத்தக்கவா்களாவா்.
சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியாவின் பாரா தடகள விளையாட்டுகளில் புதிய சாதனைகளை படைப்பதாக இருக்கும் என, இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவா் தேவேந்திர ஜஜாரியா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
போட்டி குறித்து தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்க தலைவா் சந்திரசேகா் ராஜன் கூறுகையில், ‘இந்தப் போட்டியை நடத்துவதில் தமிழ்நாடு அரசின் ஆதரவு மிக முக்கியமானதாகும். திறமைகளை வெளிக்காட்டுவதற்காக மட்டுமல்லாமல், தேசிய அளவில் பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாகவும் இப்போட்டி இருக்கும்’ என்றாா்.