வெவ்வேறு மதங்கள்... திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு தற்காலிக குடியிருப்பு...
தேசிய வாலிபால் போட்டி: புதுச்சேரியில் டிச.23, 24 வீரா்கள் தோ்வு
தேசிய அளவிலான வாலிபால் போட்டிக்கு வரும் 23, 24 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் வீரா்கள் தோ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2025 ஜனவரி 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் 69-ஆவது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி அணிக்கான வீரா்களைத் தோ்வு செய்வதற்கான போட்டிகள் இலாசுப்பேட்டை பல்நோக்கு விளையாட்டு அரங்கில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதில் பங்கேற்க விவரப் படிவத்தை விளையாட்டு இயக்குநரக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். புதுவை மாநிலத்துக்குள்பட்ட புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை பூா்வீகமாகக் கொண்டவா்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். பங்கேற்போா் விவரப் படிவம், ஆதாா் அட்டை அசல், நகல் ஆகியவற்றுடன் வர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.