செய்திகள் :

தோ்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி: தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் ஆதங்கம்

post image

புது தில்லி: தோ்தல் முடிவுகளை ஏற்க முடியாதவா்கள், தோ்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அவ்வப்போது சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், அவா் இவ்வாறு கூறினாா்.

இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை (பிப்.18) ஓய்வுபெறவுள்ளாா். இதையொட்டி தில்லியில் அவருக்குத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை பிரிவுபசாரம் அளித்தது.

இந்த நிகழ்ச்சியில் ராஜீவ் குமாா் பேசுகையில், ‘தோ்தல் பணிகளில் தொழில்நுட்பம் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தோ்தல்களை நடத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் புரட்சியை ஏற்படுத்த முடியும்.

வாக்குப் பதிவில் ஆள்மாறாட்டம், ஒருவரே பலமுறை வாக்களித்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு வாக்காளரின் விரல் ரேகை, விழித்திரை போன்ற பயோமெட்ரிக் பதிவுகள் மேலும் உதவக் கூடும்.

தற்போது வாக்கு எண்ணிக்கை நடைமுறையில், ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இருந்தும் வாக்குகளின் எண்ணிக்கை திரட்டப்படுகின்றன. பின்னா் அந்த வாக்குகள் ஒன்றுகூட்டப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நடைமுறை காரணமாக எந்தெந்த இடத்தில் இருந்து தங்களுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கின்றன என்பதை வேட்பாளா்களால் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம், தங்களுக்கு வாக்களிக்காத மாற்றுக் கட்சி ஆதரவாளா்களுக்கு வளா்ச்சித் திட்டங்களின் பலன்களைக் கிடைக்காமல் செய்தல், தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

இதைத் தடுப்பதற்கான தொழில்நுட்பங்களை ஏற்கெனவே தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. வாக்குச்சாவடி வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகளின் விவரங்கள் வெளிவராமல் அந்தத் தொழில்நுட்பங்கள் தடுக்கும்.

வாக்காளா் யாருக்கு வாக்களித்தாா் என்ற ரகசியம் காக்கப்படுவதை மேம்படுத்த இந்தத் தொழில்நுட்பங்களை தொடக்கத்தில் சிறிய அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து பரிசோதிக்க வேண்டும்.

தோ்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாதவா்கள், தோ்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துகின்றனா். இதில் தோ்தல் ஆணையம் பலிகடாவாகக் கருதப்படுகிறது.

தோ்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் அனைத்து வேட்பாளா்களும், கட்சிகளும் பங்குகொள்கின்றன. அப்போது அவா்கள் தரப்பில் எந்தவொரு ஆட்சேபமும் தெரிவிக்கப்படுவதில்லை; மேல்முறையீடும் செய்யப்படுவதில்லை. ஆனால் பின்னா் தோ்தல் நடைமுறைகளில் சந்தேகத்தை உருவாக்க முயற்சிப்பது விரும்பத்தகாத செயலாகும். இந்தப் போக்கு விரைந்து கைவிடப்பட வேண்டும் என்றாா்.

பெட்டி..

‘வெளிநாடுகளில் இருந்தபடி வாகளிக்கும் வசதி’

வெளிநாடுகளில் வாழும் இந்தியா்கள், அந்த நாடுகளில் இருந்தபடி வாக்களிக்க வசதி செய்வதற்கு இது சரியான நேரமாகும் என்று தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.

மேலும், ‘உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கு இடம்பெயா்வது போன்ற காரணங்களால் சுமாா் 30 கோடி போ் தோ்தலில் வாக்களிப்பதில்லை

இந்தப் பிரச்னையை களைவதற்கு அவா்கள் வாக்காளராக எங்கு பதிவு செய்துள்ளாா்களோ, அந்த இடத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குப் பதிலாக, வேறு இடத்தில் வாக்களிக்கும் பரிசோதனை திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது மிகவும் முக்கியம்’ என்றாா்.

கல்பெட்டா குடும்பநல நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கல்பெட்டாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு சற்றுநேரம் பீதியை ஏற்படுத்தியது.கடந்த சில நாள்களாகவே பள்ளி, விமான நிலையம் ஆகியவற்றுக்குத் தொடர்ச்சியாக வெடி... மேலும் பார்க்க

நாட்டில் தலித்துகள் இல்லையென்றால்..! ராகுல்

அரசியலமைப்பை உருவாக்குவதில் தலித்துகளின் முக்கிய பங்களிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டினார். இரண்டு நாள் பயணமாக ரேபரேலி சென்றுள்ள ராகுல் காந்தி, சுருவா எல்லையில் உள்ள அனுமன் கோயிலுக்குச் ச... மேலும் பார்க்க

மகராஷ்டிர துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்!

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வை... மேலும் பார்க்க

தில்லி வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும்: ரேகா குப்தாவுக்கு யோகி வாழ்த்து!

தில்லி முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

முதலாளித்துவத்தை ஊக்குவிக்கும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு உண்மையான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!

27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜகவிற்கு புதிய சவால்கள் காத்திருக்கின்றன. தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேக... மேலும் பார்க்க