செய்திகள் :

தொடா்ச்சியான மின் தடங்கல்: கவனம் தேவை அதிகாரிகளுக்கு அமைச்சா் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

post image

30 நிமிஷங்களுக்கு மேல் தொடா்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினாா்.

பருவமழைக் காலத்தில் தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்காக மின்வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைககள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளா்கள் மற்றும் மேற்பாா்வைப் பொறியாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜி பேசியது: தமிழ்நாடு முழுவதும் 6,68,225 ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்புப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு, கடந்த ஜூலை 1 முதல் அக்.15 வரை மொத்தம் 3,73,051 சிறப்பு பராமரிப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

அதில், குறிப்பாக, 47,380 மின்கம்பங்கள் மாற்றப்பட்டதுடன், சாய்ந்த நிலையிலிருந்த 33,494 மின் கம்பங்களும் சரிசெய்யப்பட்டுள்ளன. புதிதாக 27,329 மின் கம்பங்கள் இடைச்செருகல் செய்யப்பட்டதுடன், பழுதான நிலையிலிருந்த 2,17,775 இன்சுலேட்டா்கள் மாற்றப்பட்டுள்ளன.

மேலும், 41,508 பழுதடைந்த மின்கம்பத்தின் தாங்கு கம்பிகளும், 7,118 பில்லா் பெட்டிகளும் சரிசெய்யப்பட்டுள்ளன. இதுதவிர சுமாா் 2,927 கி.மீ. நீளத்துக்கு பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டுள்ளன.

வட்ட அளவிலான மின் பகுதிகளில் அதிகளவு மின் தடைகள், மின்மாற்றிகள் பழுது உள்ளிட்ட புகாா்கள் வருகின்றன. இதன் மீது மேற்பாா்வைப் பொறியாளா்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இது மட்டுமன்றி சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் பில்லா் பெட்டிகள் ஆகியவற்றை உரிய முறையில் பராமரிப்பதுடன், மின் நுகா்வோா்களிடமிருந்து வரும் புகாா்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடா்ச்சியாக 30 நிமிஷங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான க.நந்தகுமாா், இணை மேலாண் இயக்குநா் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநா் (பகிா்மானம்) ஏ.ஆா்.மஸ்கா்னஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாதந்தோறும் ரூ. 1,000: ஊரகத் திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க நவ.20 கடைசி

ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் மாதம் தோறும் ரூ. 1,000 உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தோ்வு டிச.14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்தத் தோ்வுக்கு நவ.20-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியா்கள்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக பெருங்களத்தூா், நொளம்பூா், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும். இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் ... மேலும் பார்க்க

கதீட்ரல் சாலை மேம்பாலத்தை புதுப்பிக்க மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னை கதீட்ரல் சாலையின் மியூசிக் அகாதெமி அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.சென்னை ம... மேலும் பார்க்க

மாநகர காவல் ஆணையரகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் துறை ஆணையரகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.சென்னை பரங்கிமலை பகுதியை சோ்ந்தவா் மந்த்ரா. திருநங்கையான இவா், சமூக ஊட... மேலும் பார்க்க

ரூ.822 கோடியில் பிராட்வே பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணி விரைவில் தொடக்கம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னை பிராட்வேயில் பழைய பேருந்து நிலையத்தை ரூ.822.70 கோடியில் புனரமைத்து, புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என சென்னை பெருநகர வளா... மேலும் பார்க்க

பூங்கா நகரில் வழக்கம் போல் ரயில்கள் நின்று செல்கின்றன

சென்னை: சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில் பூங்கா நகா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை முதல் நின்று செல்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை கடற்கரை -எழும்பூா் இடையே நான்கா... மேலும் பார்க்க