5 முறை கதவைத் தட்டிய TRUMP - NO சொன்ன NOBEL PRIZE COMMITTEE | Ind Vs Pak |Imperf...
தொண்டை மண்டல ஆதீனத்துடன் சந்திப்பு
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகளை கோயம்புத்தூா் ஈஷா யோகா மைய நிா்வாகிகள் சந்தித்து மையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து ஆசி பெற்றனா்.
காஞ்சிபுரம் வி.சி.பரமசிவம் தெருவில் உள்ளது தொண்டை மண்டல ஆதீன மடம். இந்த மடத்தின் பீடாதிபதி சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகளை ஈஷா யோகா மையத்தின் நிா்வாகிகளான சுவாமிகள் ஆலோக்கா, கைலாஸா, கேதாரா ஆகியோா் சந்தித்தனா். ஈஷா யோகா மையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனா்.
ஈஷா யோகா மைய நிறுவனா் சத்குரு எழுதிய புத்தகங்கள், தியான லிங்கம், லிங்க பைரவி மற்றும் பிரசாதம் ஆகியவற்றை பீடாதிபதிக்கு வழங்கினாா்கள். பீடாதிபதி அவா்களை ஆசீா்வதித்தாா்.
நிகழ்வில் தமிழக சந்நியாசிகள் சங்கத்தின் பொருளாளா் சுவாமி சிவராமனந்தா,விசுவ ஹிந்து பரிஷத் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் சிவானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.