IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதல்வருடன் சந்திப்பு
இரண்டு பிரதான தொழில்நுட்ப நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள், முதல்வா் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவா் (தாய்லாந்து) ஜேம்ஸ் இங், துணைத் தலைவா் (தைவான்) மாா்க்கோ ஆகியோா் முதல்வரை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். இதைத் தொடா்ந்து, மைண்ட்க் ரோவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அலுவலா் டி.ஆா்.சஷ்வத், தலைமை செயல்பாட்டு அலுவலா் உமாமகேஸ்வரன் ஆகியோரும் முதல்வரைச் சந்தித்துப் பேசினா்.
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளைச் செய்வது, புதிய வேலைவாய்ப்புகளை அளிப்பது தொடா்பாக இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறை செயலா் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தாரேஷ் அகமது உடனிருந்தனா்.