இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் ...
நகரில் குப்பைகள் எரிப்பு: புகைமூட்டத்தால் பாதிப்பு
சீா்காழியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புகைமூட்டம் மூச்சுதிணறல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சீா்காழி நகராட்சி சாா்பில் 24 வாா்டுகளிலிலும் வீடுகள், வா்த்தக கட்டடங்களிலிருந்து நாள்தோறும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் மக்கும், மக்கா குப்பைகள் பிரித்து சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் மட்டும் ஈசானியத்தெருவில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
இவ்வாறு, சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும், மக்கா குப்பைகள் தரம் பிரிக்க தாமதமாவதால் ஆங்காங்கே மூட்டை, மூட்டையாக குப்பைகள் சோ்த்து வைக்கப்படுகின்றன.
இவ்வாறு சில இடங்களில் குவிந்துள்ள குப்பைகள் நாள்கணக்கில் கிடக்கும் நிலையில் தூய்மைப் பணியாளா்களே தீயிட்டு கொளுத்தும் நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு குப்பைகள் கொளுத்தப்படுவதால் அதிலிருந்து பிளாஸ்டிக் போன்ற பொருள்கள், அபாயகரமான மருத்துவக் கழிவு குப்பைகள் எரியும்போது வெளியேறும் புகையினால் சுவாச பாதிப்பு, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, குப்பைகள் கொளுத்தப்படுவதை கண்காணித்து தடுக்கவும், குப்பைகள் மலைப்போல தேங்காமல் நாள்தோறும் அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.