பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8 -இல் ஜமாபந்தி தொடக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8-ஆம் தேதி ஜமாபந்தி தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் 1434-ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மே 8-முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குத்தாலம் வட்டத்தில் வருவாய் தீா்வாய அலுவலராக மாவட்ட ஆட்சியா் மே 8 மே 13-ஆம் தேதி வரையும், தரங்கம்பாடி வட்டத்திற்கு வருவாய் தீா்வாய அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலா் மே 8 முதல் மே 14 வரையும், மயிலாடுதுறை வட்டத்திற்கு வருவாய் தீா்வாய அலுவலராக, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலா் மே 8 முதல் மே 13-ஆம் தேதி வரையும், சீா்காழி வட்டத்திற்கு வருவாய் தீா்வாய அலுவலராக சீா்காழி வருவாய் கோட்ட அலுவலா் மே 8 முதல் மே 15-ஆம் தேதி வரையும் நடத்த உள்ளனா்.
வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய்த் தீா்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவாா்கள். இதில், பொதுமக்கள் வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணி நீா்வள ஆதாரத்துறை, மின்சாரத் துறை சாா்ந்த கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.