செய்திகள் :

``நடிகர்கள் உங்கள் அடிமைகள் அல்ல..'' - கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு பாஜக கண்டனம்

post image

கர்நாடக மாநிலத்தில் ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் சமநிலை நீர்த்தேக்கத்தை செயல்படுத்தக் கோரி 2022-ம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சிகள் தலைமையில் மேகதாது பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பாதயாத்திரையில் அனைத்து தரப்பினரும் கலந்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சாது கோகிலா, துனியா விஜி ஆகிய இரண்டு நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை 16-வது பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கவிழா நடந்தது. இதில் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

R. Ashoka

அப்போது, ``நான் திரைப்பட வர்த்தக சபையின் மீதும், கன்னட திரைப்படத் துறையில் இருக்கும் நடிகர்கள் மீதும் கோபமாக இருக்கிறேன். பெங்களூருக்கு தண்ணீர் வருவதை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒரு பாதயாத்திரை மேற்கொண்டோம். மாநில நலனுக்காக நாங்கள் அதைச் செய்தோம். இந்த இயக்கத்திற்கு சாது கோகிலா, துனியா விஜி ஆகிய இரண்டு நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டு ஆதரவளித்தனர். எதிர்காலத்தில் இதுபோன்ற இயக்கங்களுக்கு திரைப்பட சகோதரர்களிடம் ஆதரவு கோருகிறோம். நாங்கள் அனுமதி வழங்கவில்லை என்றால், உங்களால் எந்தப் படத்தையும் படமாக்க முடியாது. எப்போது கட்டுப்பாட்டை இறுக்குவது என்பது எங்களுக்குத் தெரியும்." என்றார்.

துணை முதல்வரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலளித்திருக்கும் கர்நாடக பா.ஜ.க தலைவர் ஆர்.அசோகா, ``துணை முதல்வருக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் கூட்டுறவு அமைச்சர் கே.என். ராஜண்ணா போன்ற தலைவர்களை இறுக்குவதில் மட்டும் சிவகுமார் கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய தலைவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய சிவகுமார், நடிகர்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். இந்த அச்சுறுத்தல் கலாச்சாரம் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. சினிமா நடிகர்கள் ஒன்றும் உங்கள் அடிமைகள் அல்ல. உங்களின் ஆதரவால் அவர்களின் படங்கள் வெற்றிபெறவில்லை. மாநிலத்தில் தொடங்கப்படும் எந்தவொரு இயக்கத்தையும் ஆதரிப்பது நடிகர்களின் தனிப்பட்ட விருப்பம்." என விமர்சித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``ஒரு சிலர் பதவி வெறிக்காக ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் திரள்வது தடுக்கப்படுகிறது'' - டிடிவி தினகரன்

அமமுக ஆண்டிபட்டி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஒரு சிலரின் பதவி வெறிக்காக ஜெயலலிதா த... மேலும் பார்க்க

Gaza: முதல் நோன்பில் இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி! - ``சர்வதேச சட்ட விதிமீறல்'' - எச்சரிக்கும் ஐ.நா!

இஸ்ரேலுக்கும் - ஹாமஸுக்கும் நடந்து வந்தப் போர் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக முடிவு செய்யப்பட்ட போர் நிறுத்த முதல் கட்ட ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முடிந்தது. இந்த ஒப்பந்தம் முடிவதற்கு முன்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை... வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா?

Doctor Vikatan: என்தோழிக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு தலையில் முடியே இல்லை. இது குறித்துஅவளுக்குபெருங்கவலை. குழந்தை வளர்ந்த பிறகும்இப்படியேஇருந்துவிட்டால் என்ன செய்வது எ... மேலும் பார்க்க

``படிக்க, வேலையில் சேர உதவிய முதல்வர்... திருமணத்திற்கும் வாழ்த்தியுள்ளார்'' - மணப்பெண் நெகிழ்ச்சி

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமானிய குடும்பத்து பெண்ணின் திருமணத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து அனுப்பி வைத்த சம்பவம், மணமக்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருவேடகத்தை சேர்ந்த ம... மேலும் பார்க்க

``2 மாதங்களில் 185 கொலைகள், பெண்களுக்கு எதிராக 273 புகார்கள்..'' - எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சி இருண்டகால ஆட்சி என்று ஸ்டாலின் ப... மேலும் பார்க்க

``இது மூழ்குகிற கப்பல் இல்லை, கரை சேருகிற கப்பல்'' - தேனியில் ஓபிஎஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தேனியில் அதிமுக பொதுக்கூட்டம்..அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, "தேனி மாவட்டத்த... மேலும் பார்க்க