சென்னை மாநகரப் பேருந்துகளில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம்
``ஒரு சிலர் பதவி வெறிக்காக ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் திரள்வது தடுக்கப்படுகிறது'' - டிடிவி தினகரன்
அமமுக ஆண்டிபட்டி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஒரு சிலரின் பதவி வெறிக்காக ஜெயலலிதா தொண்டர்கள் ஒரணியில் திரள்வது தடுக்கப்பட்டு வருகிறது.

கட்சி பதவிக்காக கட்சியின் சட்டவிதிகளையே மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அவர் பேசுவதெல்லாம் நரித்தனமாக நயவஞ்சமாக தான் பேசுகிறார். துரோகி என்ற சொல்லுக்கு உவமையாக இருக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி. மூழ்கிற கப்பல் இல்லை கரை சேருகிற கப்பல் எனப் பேசியிருக்கிறார் என்றால் பழனிசாமி கட்சியை பலவீனப்படுத்தி உள்ளார்.
கட்சி மூழ்குவதால் தானே இதை பேசுகிறார் என புரிந்து கொள்ள வேண்டும். குருட்டு அதிர்ஸ்டம் லாட்டரி சீட்டில் பரிசு கிடைப்பதை போல முதல்வர் பதவி கிடைத்தது அதை பயன்படுத்தி கட்சி பொதுச்செயலாளர் பதவியை கையகப்படுத்தி வைத்திருக்கிறார். அவர் சொந்த நலத்திற்காக சுயலாபத்திற்காக, வழக்குகளில் இருந்து திமுக அரசிடம் தன்னை காத்துக்கொள்ள கட்சியை பயன்படுத்திக்கொள்கிறார். இரட்டை இலை சின்னம் இருக்கிறது பணபலம் இருக்கிறது என்பதால் சிலர் வாய்பொத்தி காவடி தூக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பழனிசாமி கட்சியை மூழ்கடித்துவிடுவார். அவருக்கு முன்னே 72, 74, 80, 84-களில் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆனவர்கள் கட்சியில் இருக்க இவர் தன்னை சீனியர் எனக் கூறிக்கொள்வது பொய். தவழ்ந்து வந்து பதவி பெற்று தூரேகம் செய்தவருக்கு துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர் துரோகத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
