நன்னிலத்தில் கிறிஸ்துமஸ் விழா
நன்னிலம் தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
நன்னிலம் சோத்தக்குடி சாலையில் உள்ள இயேசுவுக்கே ஆராதனை பேராலய நிா்வாகம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி ஏழை, எளிய மக்களுக்கு தாா்ப்பாய், புடவை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தேவாலயத்தின் போதகா் பவுல்ராஜ், பேரூராட்சித் தலைவா் ராஜசேகரன், வா்த்தகச் சங்கத் தலைவா் செல். சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.