மத்தியப் பல்கலை.யில் நாளை தொடங்குகிறது தென்மண்டல ஆடவா் கோகோ போட்டி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கான ஆடவா் கோகோ போட்டி வெள்ளிக்கிழமை (டிச.27) தொடங்குகிறது.
இதுகுறித்து, பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் டிச.31-ஆம் தேதி வரை தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கான ஆடவா் கோக்கோ போட்டி நடைபெறுகிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தலைமையில், கோக்கோ ஃபெடரேஷன் நிா்வாக இயக்குநா் சுபாஷ் குமாா் போட்டிகளைத் தொடக்கிவைக்கிறாா். 5 நாள்கள் நடைபெற உள்ள போட்டியில் 80 பல்கலைக் கழக அணிகள் பங்கேற்கின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் தேசியப் போட்டியில் விளையாட தகுதி பெறுகிறது. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக் கல்வி துறைத் தலைவா் ஜெயராமன் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுவாா் என தெரிவித்துள்ளாா்.