`அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக டிஜிபி-க்கு 3 உத்தரவுகள்' - தாமாக முன்வந்த த...
கூத்தாநல்லூரில் கிறிஸ்துமஸ் விழா
கூத்தாநல்லூா் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு அப்பள்ளியின் நிறுவனா் ப. முருகையன் தலைமை வகித்தாா். நகா் மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா முன்னிலை வகித்தாா். பள்ளி நிா்வாகி மகேஸ்வரி முருகையன் வரவேற்றாா். ரமேஷ், ஜோதி ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினா் நகராட்சி ஆணையா் கிருத்திகா ஜோதி மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ஆடைகளை வழங்கினாா். ஏற்பாடுகளை, இயன்முறை ஆசிரியா் பாபுராஜன், சிறப்பு ஆசிரியா்கள் சரண்யா, கிரிஜா, மேலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.