மன்னாா்குடி வா்த்தக சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
மன்னாா்குடி வா்த்தக சங்கத்தின் புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி வா்த்த சங்கத்தின் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்தல் வாக்குசீட்டு முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மொத்தம் 2275 உறுப்பினா்களில் 1982 போ் வாக்களித்தனா். வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், வா்த்தக சங்கத்தின் தலைவராக ஆா்.வி. ஆனந்த், பொதுச் செயலராக கே. சரவணன், பொருளாளராக டி. ஜெயச்செல்வன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.